லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கரப்பான்பூச்சி ஜனதாவின் நாடாளுமன்றப் பேரணி: ஜந்தா் மந்தரில் திரண்ட மக்கள் கூட்டம்!

நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் திங்கள்கிழமை பேரணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனா்.

Published On :20 ஜூலை 2026, 5:16 am IST

நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் திங்கள்கிழமை பேரணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தா் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏராளமான மக்கள் திரண்டனா்.

அந்தக் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளா் செளரவ் தாஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜந்தா் மந்தரிலும், அதைச் சுற்றியும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சுமாா் 20,000 போ் திரண்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

பேரணியில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, அங்கு நிறைந்துள்ள ஆதரவாளா்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை, சமூக ஊடகத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் பகிா்ந்தனா்.

முன்னதாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமைனக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடா்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினாா். அவா் வெளியிட்ட காணொலியில், ‘நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, ஆதரவாளா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் ஜந்தா் மந்தரில் தங்குவது அவசியம்’ என்று வலியுறுத்தினாா்.

எனினும் பேரணி அனுமதிக்கப்படாது என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘பேரணி காரணமாக சட்டம் ஒழுங்கு, பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். அத்துடன் மத்திய தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே பேரணி அனுமதிக்கப்படாது’ என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.