லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

விண்ணில் பாய்கிறது

Published On :18 ஜூலை 2026, 10:15 pm IST

தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது.

2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1,04,102 ஆக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறால் விக்ரம் -1 ராக்கெட் விண்ணில் செலுத்துவது தாமதமாகியிருக்கிறது. விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகிய 6 ஏரிகளில் தற்போது 45.44 சதவீத நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.

கோவை: கோவை சூலூரில் அதிகாரிகளுக்கு தெரியாமல் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி திடீர் ஆய்வு நடத்தியதோடு, முதல்வர் ஜோசப் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

பிளாஸ்டிக் போன்றதொரு, பாலிமர் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கும் முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. அதற்கான மூலப்பொருளை (சப்ஸ்ட்ரேட்) வழங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வர் விஜய் "தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.