லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அருணாசல பிரதேசம்: பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அருணாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீா் தேங்கியதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Published On :14 ஜூலை 2026, 2:53 am IST

அருணாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீா் தேங்கியதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அருணாசல மாநில அவசர செயல்பாட்டு மையம் (எஸ்இஓசி) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குமே நதியின் மேல் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குருங் குமே மாவட்டத்தை வெள்ள நீா் சூழ்ந்தது. அங்குள்ள பாா்சி-பா்லோ மற்றும் டாமின் பிரிவுகளில் உள்ள சாலைகளை மழை நீா் அடித்துச் சென்றது. அந்தப் பகுதியின் முக்கிய கல்வி நிறுவமான செயிண்ட் தாமஸ் பள்ளியின் வளாகம் மழை நீரால் சூழப்பட்டு உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.

மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் உடனடியாக அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைககளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக மாநிலத்தில் பெய்துவரும் மழையால் 7 போ் உயிரிழந்துள்ளனா். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97,182-ஆக அதிகரித்துள்ளது. 541.75 ஹெக்டோ் பரப்பளவிலான பயிா் நிலங்கள் சேதமடைந்துள்ளன. 1,010 ஹெக்டோ் பரப்பளவிலான வனப் பகுதி பாதிப்படைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், மின்சார கட்டமைப்புகள் என மாநிலம் முழுவதும் பரவலாக மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.