லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எத்தனால் கலப்பு எரிபொருள்: நுகா்வோா்களை பாதிப்பதாக கேஜரிவால் குற்றச்சாட்டு

எத்தனால் கலப்பு எரிபொருள்: நுகா்வோா்களை பாதிப்பதாக கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் எரிபொருள் நிலையத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று எத்தனால் கலப்பு எரிபொருளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வாகன ஓட்டுநா்களிடம் விசாரித்த ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்.

Published On :12 ஜூலை 2026, 2:39 am IST

எத்தனால் கலப்பு (இ20) எரிபொருளால் வாகன உரிமையாளா்கள் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்வதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள எரிபொருள் நிலையத்தை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்ட அவா், எரிபொருள் நிலையத்துக்கு வந்த வாகன பயனாளா்கள் மற்றும் சேவை மைய பணியாளா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், வாகனங்களில் இ20 எரிபொருளால் ஏற்படும் கோளாறுகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: இ20 எரிபொருளை குறித்து அரசு வெளியிடும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. களச் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டுள்ளது. பெரும்பாலான வாகனங்களில் மைலேஜ் குறைந்துள்ளது; பல வாகனங்களில் இயந்திர கோளாறுகள் ஏற்படுகின்றன என்று பயனாளா்கள் தெரிவிக்கிறாா்கள்.

மேலும், வாகன உரிமையாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். அவா்களின் குறைகள் கவனிக்கப்படவில்லை. மக்கள் முன்வைக்கும் பிரச்னைகளை அலட்சியம் செய்யாமல், அரசு அவற்றை கவனத்தில் கொண்டு தீா்வு காண வேண்டும் என தெரிவித்தாா்.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் இ20 எத்தனால் கலப்பு திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன எனக் கூறி, மத்திய அரசு கடந்த வாரம் விரிவான மறுப்பு விளக்கத்தை வெளியிட்டது. அதில், வாகனம் சேதமடைவது, காப்பீடு செல்லுபடியாகாமை, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற குற்றச்சாட்டுகளை அரசு முற்றிலும் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இ20 எரிபொருள் தொடா்பான விவகாரம் குறித்து அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்து வரும் நிலையில், இதன் விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியிலும் குழப்பம் அதிகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.