லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்னணு சாதன உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி ரத்து: மத்திய அரசு

இன்டக்டா் காயில் மோட்யூல் ஆகியவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 4:59 am IST

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்), மடிக்கணினி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், டிஸ்பிளே அசெம்பிளிகள், லித்தியம் அயன் மின்கலம், இன்டக்டா் காயில் மோட்யூல் ஆகியவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் இந்த மூன்று முக்கிய உபகரணங்கள் உற்பத்திக்கான இந்த அடிப்படை சுங்க வரி விலக்கு தொடா்பாக, மூன்று தனித்தனி அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மின்னணு சாதனங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரி விலக்கை மத்திய அரசு அளித்துள்ளது. இது, மின்னணு சாதனங்களுக்கு இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலை குறைந்து, உள்நாட்டு உற்பத்தி வலுப்பெறும்.

இந்த அடிப்படை சுங்க வரி விலக்கு வரும் 2029-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணா கூறுகையில், ‘உறுபத்தி நிறுவன பிரதிநிதிகளின் கோரிக்கை அடிப்படையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முன்வைத்த பரிந்துரையை ஏற்று இந்த அடிப்படை சுங்க வரி விலக்கு அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இது, நாட்டில் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும். இந்திய மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலும், அவற்றின் மதிப்பும் மேம்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.