
வயநாடு நிலச்சரிவு! 4 பேர் பலி; கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!
வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருப்பது பற்றி...

வயநாடு நிலச்சரிவு - PTI
வயநாடு நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டம், மெப்பாடி அருகிலுள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கோம்பொயில் - மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் அருகே இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டவர்கள், அப்பகுதி வீடுகள், விடுதிகளில் வசித்த சிலர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 4 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜெபி மேதர் கூறுகையில்,
“இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளனர். சுமார் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 7 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரள அரசின் அனைத்து துறைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என எண்ணுகிறோம். வயநாடு எம்பி பிரியங்கா காந்தியும் தொடர்ந்து நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர் கனமழை மற்றும் பேரிடர் காரணமாக வயநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை நாளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Wayanad landslide - 4 dead; orders issued to close educational institutions and tourist spots
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







