லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு!

இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பற்றி...

Prime Minister Modi with people of Indian origin in Indonesia.

இந்தோனேசியாவில் இந்திய வம்சாவளியினர்களுடன் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ்

Published On :6 ஜூலை 2026, 8:30 pm IST

இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் திங்கள்கிழமை (ஜூலை 6) உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முதல் கட்டமாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திலேயே நேரில் சென்று வரவேற்றார்.

அதன் பின்னர், பரதநாட்டியம் மற்றும் இந்தோனேசியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

நனடத்தைக் கண்டுகளித்த பிரதமர் மோடி

நனடத்தைக் கண்டுகளித்த பிரதமர் மோடி - படம் - எக்ஸ்

அந்த நடன நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த அவர் அங்கு வந்த இந்திய வம்சாவளியினர்களுடன் கைக்குலுக்கி மகிழ்ந்தார்.

இந்திய வம்சாவளியினர்களுடன் கைக்குலுக்கி மகிழும் பிரதமர் மோடி.

இந்திய வம்சாவளியினர்களுடன் கைக்குலுக்கி மகிழும் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ்

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜகார்த்தாவில் தரையிறங்கினேன். விமான நிலையத்தில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ என்னை வரவேற்ற செயல் என்னை நெகிழச் செய்தது. 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுடனான உறவுகளை நாம் வலுப்படுத்தினோம். இது நமது மக்களுக்குப் பயனளித்துள்ளது.

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் முக்கிய உரையாடல்களை நிகழ்த்த உள்ளேன். இந்தோனேசியாவில் இருக்கும்போது, ​​இந்திய வம்சாவளியினர்களுடன் கலந்துரையாடுவதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கும், அதைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கும் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

People of Indian origin gave an enthusiastic welcome to Prime Minister Modi upon his arrival in Indonesia on Monday (July 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.