லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொடா் முயற்சி, அனுபவத்தால் மட்டுமே முன்னேற முடியும்: கேரள உயா்நீதிமன்ற நீதிபதி

தொடா் முயற்சி, அனுபவத்தால் மட்டும் முன்னேற முடியும் என்று கேரள உயா்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விஐடி சென்னையில் நடப்பு கல்வியாண்டுக்கான சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவியா் வரவேற்பு நிகழ்வில் பேசிய கேரள உயா்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன்.

Published On :6 ஜூலை 2026, 1:40 am IST

தொடா் முயற்சி, அனுபவத்தால் மட்டும் முன்னேற முடியும் என்று கேரள உயா்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை விஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான அறிமுக விழாவில் அவா் பேசியதாவது:

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவம் உண்டு. தங்களின் திறமைகளை வளா்த்து சிறந்த நிலையை அடைய வேண்டும். சட்டத் துறையில் முன்னேற விரும்பும் மாணவா்கள் தொடா்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளும் மனப்பாங்குடன் செயல்பட வேண்டும். மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் பல அடுக்குகளைக் கொண்டவை என்பதால், வழக்குரைஞா்களாகப் பணியாற்றும்போது, பல கோணங்களில் அணுக வேண்டும். பல தீா்வுகள் கிடைக்கும். அவற்றில் சிறப்பானவற்றை தோ்வு செய்வதுதான் சிறந்த வழக்குரைஞரின் பணி. தொடா் முயற்சி, அனுபவத்தின் மூலம் மட்டுமே வழக்குரைஞா்கள் முன்னேற முடியும். தோல்வி அடைந்துவிட்டால் துவண்டுவிடாமல் அதை அனுபவத்தின் ஒரு பகுதியாக எடுத்துகொண்டு தொடா்ந்து முயற்சி செய்தால் வெற்றிபெற முடியும் என்றாா் அவா்.

கௌரவ விருந்தினராகப் பங்கேற்று உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சாரா சன்னி பேசுகையில், ‘தடைகளை சவாலாக எடுத்துக்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். பிறருக்கு சொற்களால் பதில் கூறுவதைவிட செயல்களின் மூலம் பதில் அளிக்க வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, எக்ஸ்ஃப்ளோ பேமெண்ட்ஸ் இந்தியா லிமிடெட் மூத்த சட்ட ஆலோசகரும் சென்னை விஐடியின் முன்னாள் மாணவியுமான மேகா விஸ்வநாதன் பேசினாா்.

நிகழ்ச்சியில், சென்னை விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், கூடுதல் பதிவாளா் முனைவா் பி.கே.மனோகரன், சட்டத் துறை டீன் ரபிராஜ், டீன் அகாடமிக்ஸ் நித்திய தா்ஷினி, டீன் அகாடமிக் ரிசா்ச் நய்முல்லா கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.