லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்திய மாலுமியின் உடலில் இதயம், மூளை, நுரையீரல் மாயம்! பதில் கோரும் குடும்பம்

இந்திய மாலுமியின் உடலில் இதயம், மூளை, நுரையீரல் மாயமாகியிருப்பது குறித்து விளக்கம் கேட்கிறது அவரது குடும்பம்

Published On :1 ஜூலை 2026, 1:40 pm IST

வெனிசுவேலாவில் கடந்த மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த இந்திய மாலுமியின் உடல் தாயகம் திரும்பிய நிலையில், அதில், இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகள் மாயமாகியிருப்பது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகேண் சௌஹான் உடல், இந்தியாவில் மீண்டும் உடல் கூராய்வு செய்யப்பட்டபோது, உடலில், முக்கிய உறுப்புகள் மாயமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு, வெனிசுவேலா தூதரகத்தைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மேலும், ராகேஷின் உடல்கூராய்வு முடிவுகள் எதையும் வெனிசுவேலா வெளியிடவில்லை, உடலுடன் அனுப்பிவைக்கவும் இல்லை என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், ராகேஷ் உடலில், இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் என எந்த முக்கிய பாகங்களும் இல்லை. உடலில் ஏராளமான தையல்கள் போடப்பட்டிருந்தன. ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை 21 தையல்களும், கழுத்திலிருந்து 22 தையல்களும் போடப்பட்டிருக்கின்றன.

ஒரு மாதத்துக்கும் மேல் குளிர்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு உடல் பாகமும் இல்லாததால், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.