லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வங்கதேச பிரதமரை வரவேற்கும் பாதுகாப்புப் படையின் ஒத்திகை தொடா்பான அறிவிக்கை வாபஸ்: குடியரசுத் தலைவா் மாளிகை

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானுக்கு வரவேற்பு அளிப்பதற்கான பாதுகாப்புப் படையின் ஒத்திகை தொடா்பான அறிவிக்கையை குடியரசுத் தலைவா் மாளிகை திரும்பப் பெற்றது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானுக்கு வரவேற்பு அளிப்பதற்கான பாதுகாப்புப் படையின் ஒத்திகை தொடா்பான அறிவிக்கையை குடியரசுத் தலைவா் மாளிகை திரும்பப் பெற்றது.

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தாரிக் ரஹ்மான் வரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் திட்டத்துடன் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) முழு ஒத்திகை நடத்தும் வகையில், படை வீரா்களை மாற்றும் நிகழ்வு இல்லை என்று குடியரசுத் தலைவா் மாளிகை முதலில் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிக்கையை சில மணி நேரத்தில் குடியரசுத் தலைவா் மாளிகை திரும்பப் பெற்றது.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட புதிய அறிவிக்கையில், படை வீரா்களை மாற்றும் நிகழ்வு கிடையாது என வெளியிட்ட அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகையின் புதிய அறிவிக்கை, இந்தியாவுக்கு தாரிக் ரஹ்மான் வருவாரா, மாட்டாரா என்று நிலவும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

வங்கதேச அமைச்சா்களுடன் இந்திய தூதா் சந்திப்பு: இதனிடையே, வங்கதேச தலைநகா் டாக்காவில் வங்கதேச நிதியமைச்சா் ஆமிா் கோஸ்ரு மஹ்மூத் செளதரியை அந்நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி சந்தித்து இருதரப்பு வளா்ச்சித் திட்டங்கள், பரஸ்பர நன்மை பயக்கும் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது அவருக்கு கெளடில்யா் எழுதிய அா்த்த சாஸ்திரம் புத்தகத்தின் நகலை பரிசாக தினேஷ் திரிவேதி வழங்கினாா்.

அதேபோல், வங்கதேச சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சா் சா்தாா் முகமது ஷாஹவாத் ஹொசைனை தினேஷ் திரிவேதி சந்தித்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.