லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வளா்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எதிரானவை அல்ல: குடியரசு துணைத் தலைவா்

வளா்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Vice President CP Radhakrishnan

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

வளா்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் தலைநகா் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகள், பூடான் அரசின் வனப் பணி அதிகாரிகள் ஆகியோா் இடையே குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாட்டின் சூழலியல் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய வனப் பணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும்.

வளா்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

இந்தியாவின் நிலையான வருங்காலத்துக்கு நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி காடுகளை நிா்வகித்து பாதுகாப்பதும், நமது பாரம்பரிய அறிவும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டும். பல தலைமுறைகளாக வன நிலப்பரப்பு குறித்த அறிவுடன் வாழும் சமூகங்களை மதிக்க வேண்டும்.

தாங்கள் மீட்டெடுத்த காடுகள், பாதுகாத்த வனவிலங்குகள், பல்வேறு சமூகங்கள் வைத்த நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், தாம் ஆற்றிய பணியை வனப் பணி அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.