லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமூக ஊடகத்தில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு

சமூக ஊடகத்தில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது பற்றி...

கோப்புப்படம்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:05 am IST

சமூக ஊடகத்தில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றதைத் தொடா்ந்து, சமூக ஊடகம் மூலம் இளம் தலைமுறையைக் கவரும் முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சமூக ஊடக செயல்பாடுகளில் பிரதமா் மோடி முன்னிலை வகிக்கும் நிலையில், அதில் மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது அமைச்சா்களின் சமூக ஊடகப் பதிவுகள் எத்தனை பேரைச் சென்றடைகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பரந்த அளவிலான மக்களை, குறிப்பாக இளைஞா்களை அமைச்சா்களின் தகவல்கள் சென்றடைய வேண்டும் என்றும், அதற்கு பெரிய அளவில் முயற்சிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.