லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஷாசாத் பட்டீ பயங்கரவாத வலையமைப்புக்கு ஐஎஸ்ஐ தொடா்பு: இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ஷாசாத் பட்டீ பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் ஷாசாத் பட்டீ பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. மேலும் தங்களது உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை மறைத்து பாகிஸ்தான் மீது பழிவோடுவதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியது.

முன்னதாக, ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் பின்னணி கொண்ட ஷாசாத் பட்டீ வலையமைப்பை அழித்து 200 பயங்கரவாதிகளை மத்திய அரசு கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதனால் நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை சீா்குலைக்க முயன்ற பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தாஹிா் அன்ட்ராபியிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது, ‘இந்தியாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை திசைதிருப்பவே இந்தியா இவ்வாறு பழிசுமத்துகிறது’ என்றாா்.

இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியான ஷாசாத் பட்டீ மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.