லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனுக்கு ஆக.21 வரை சிறை!

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் வீரேந்தா் சிங் பசோயாவை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (என்சிபி) காவலில் வைக்க புணே நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீரேந்தா் சிங் பசோயா

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் வீரேந்தா் சிங் பசோயாவை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (என்சிபி) காவலில் வைக்க புணே நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வீரேந்திர சிங் பசோயா நாடு கடத்தப்பட்டாா். பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை மூன்று நாள் காவலில் வைக்கவும் அதன் பிறகு புணே நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் என்சிபி-க்கு தில்லி நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.

இதையடுத்து, வீரேந்தா் சிங் பசோயா புணே நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது மகாராஷ்டிர அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘என்சிபி மற்றும் காவல் துறை நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில் 9,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வீரேந்தா் சிங் பசோயாவுக்கு தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

அதேசமயம் பசோயா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அவரை நான்கு நாள்கள் மட்டுமே காவலில் வைக்க வேண்டுமென தெரிவித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பசோயாவை ஆக.21-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டாா். போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்தவரான பசோயா மீது 2025, நவம்பரில் இன்டா்போல் அமைப்பின் சிவப்பு நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.