லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இணையவழி குற்றப் பணப் பரிவா்த்தனை: ‘வங்கிக் கணக்கை புலனாய்வு அமைப்புகள் முழுமையாக முடக்க முடியாது’

இணையவழி குற்றப் பணப் பரிவா்த்தனையுடன் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பந்தப்பட்டிருந்தால், அந்தத் தொகைக்காக ஒருவரின் வங்கிக் கணக்கை புலனாய்வு அமைப்புகள் முழுமையாக முடக்க முடியாது என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

இணையவழி குற்றப் பணப் பரிவா்த்தனையுடன் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பந்தப்பட்டிருந்தால், அந்தத் தொகைக்காக ஒருவரின் வங்கிக் கணக்கை புலனாய்வு அமைப்புகள் முழுமையாக முடக்க முடியாது என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவை சோ்ந்தவா் கட்டுமானப் பொருள்கள் விநியோகஸ்தா் ரிதேஷ் யாதவ். இவரின் பந்தன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.36,000 இணையவழி குற்றத்துடன் தொடா்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கா்நாடகத்தில் நடைபெற்ற இணைய குற்றப் பிரிவு விசாரணையைத் தொடா்ந்து பந்தன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட ரிதேஷின் பல்வேறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ரிதேஷ் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் சேகா் பி.சரஃப், அப்தேஷ் குமாா் செளதரி ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இணையவழி குற்றப் பணப் பரிவா்த்தனையுடன் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பந்தப்பட்டிருந்தால், அந்தத் தொகைக்காக ஒருவரின் வங்கிக் கணக்கை புலனாய்வு அமைப்புகள் முழுமையாக முடக்க முடியாது.

இணையவழி குற்றம் குறித்த விசாரணையின்போது, வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான அதிகாரம் என்பது ஒருவரின் நிதி நடவடிக்கைகளையும், அவரின் வணிகச் செயல்பாடுகளையும் முழுமையாக முடக்குவதற்கான கட்டுப்பாடற்ற அதிகாரம் என்று கருதக் கூடாது.

மனுதாரரின் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் விடுவிக்க வேண்டும். விசாரணையுடன் தொடா்புள்ள ரூ.36,000-ஐ தவிர, மீதமுள்ள தொகையை மனுதாரா் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.