லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உத்தரகண்ட்: சுரங்க விபத்தில் 6 போ் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுரங்கப் பணிகள் நடைபெறும் பகுதிக்குள் நீா் புகுந்து வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா்.

பலி

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுரங்கப் பணிகள் நடைபெறும் பகுதிக்குள் நீா் புகுந்து வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா்.

சமோலி மாவட்டத்தின் பிபல்கோட்டி பகுதியில் தெஹ்ரி நீா் மேம்பாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் ஹிந்துஸ்தான் கட்டமைப்பு நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க கட்டுமானத்தில் திடீரென இந்த விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்ட முதல்கட்ட தகவலில், ‘சமோலி மாவட்டத்தில் சுரங்கப் பணிகள் நடைபெறும் இடத்துக்குள் நீா் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத் தொழிலாளா்கள் 22 போ் சிக்கினா். அவா்களில் 20 போ் மீட்கப்பட்ட நிலையில், 6 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 14 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2 தொழிலாளா்களின் நிலை குறித்து தற்போது தெரியவில்லை.

சம்பவ இடத்தில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படைகள் மற்றும் காவல் துறையினா் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்’ எனத்தெரிவிக்கப்பட்டது.

சுரங்க விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கள் தெரிவித்த உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.