லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண், ஆதரவற்றோர் செஸ் வரி விதிப்பு!

ஹிமாசலில் பெட்ரோல், டீசல் மீது கைம்பெண், ஆதரவற்றோர் செஸ் வரி விதிக்கப்பட்டது பற்றி...

பெட்ரோல், டீசல் விலைகள்

பெட்ரோல், டீசல் - கோப்புப்படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:47 pm IST

ஹிமாசல் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலனுக்கான செஸ் வரி செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.

கணவனை இழந்த கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவும் நோக்கி பெட்ரோல் மற்றும் அதிவேக டீசலுக்கு லிட்டருக்கு 60 பைசா வீதம் செஸ் வரி விதிக்க ஹிமாசல் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த வரி விதிப்பானது அமலுக்கு வந்திருப்பதாக ஹிமாசல் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஹிமாசல் பிரதேசம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஹிமாசல் பிரதேச மதிப்பு கூட்டப்பட்ட வரித் திருத்த மசோதா 2026-ஐ அம்மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

இந்த திருத்தப்பட்ட சட்டமானது, அதிகபட்சம் ரூ. 5 வரை வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. இதனைப் பயன்படுத்தி கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலனுக்கான செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் ஹிமாசல் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்குர், காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆவர் தெரிவித்திருப்பதாவது:

“ஹிமாசல் பிரதேச அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் பெயரில் வரி விதித்து வருவாய் ஈட்டுவது முறையற்றது. இந்த வரி விதிப்பை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஹிமாசல் அரசு அந்த விலையை மேலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Summary

Widows and Orphans cess announced on petrol and diesel in Himachal Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.