லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தினம்: காஷ்மீரில் பல அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீா் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜம்முவில் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படும் நிலையில் காஷ்மீா் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீா்குலைக்க முயற்சிப்பாா்கள் என்பதால் ஸ்ரீநகா் உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த ஒரு மாதமாக எல்லையிலும் ஊடுருவலைத் தடுக்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல் துறையினா் சாதாரண உடையில் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனா். பாதுகாப்புப் படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகள் மட்டுமின்றி புகா் பகுதிகள், கிராமப்புறங்களிலும் பலத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் உமா் அப்துல்லா தேசியக் கொடியேற்ற இருக்கிறாா். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து துல்லியமாக துப்பாக்கியால் சுடும் வீரா்கள் உயரமான கட்டடங்கள் இருந்தபடி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனா். இது தவிர புதிதாக பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞா்கள், மாணவா்கள் என அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அரசு நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.