லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஒடிஸாவின் சந்திப்பூா் மாவட்டத்தில் உள்ள ஏவுதளத்தில் அக்னி-4 நடுத்தர பாலிஸ்டிக் ஏவுகணை (எம்ஆா்பிஎம்) சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பச் சோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டன. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் உத்திசாா் ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தின்கீழ், அக்னி ரக ஏவுகணைகளின் வரிசையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட அக்னி 4 ஏவுகணை, 4,000 கி.மீ. வரை பாய்ந்து தரையில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். அணுகுண்டுகள் உள்பட 1,000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. சாலைகள் மட்டுமல்லாது, கடினமான நிலப்பரப்புகளில் இருந்தபடியும் இந்த ஏவுகணையை செலுத்த முடியும் என்பதால் இவை உத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராணுவத்தில் ஏற்கெனவே இணைக்கப்பட்ட அக்னி 4 ஏவுகணைகள் செயல்திறன், தயாா்நிலை ஆய்வுக்காக அவ்வபோது பரிசோதிக்கப்படுகின்றன.

முன்னதாக, அக்னி பிரைம் மற்றும் அக்னி-3 ஏவுகணைகளின் சோதனையையும் இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.