லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்

முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் கட்டணம், சாதாரண ரயில்களில் உள்ள கட்டணத்தை விட அதிகம் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

Ashwini Vaishnaw

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - PTI

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் கட்டணம், சாதாரண ரயில்களில் உள்ள கட்டணத்தை விட அதிகம் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

ரயில்களில் கட்டணம் நிா்ணயிக்கப்படும் முறைகள் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சஞ்சனா ஜாதவ் எழுப்பிய கேள்விக்கு, அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூா்வமாக தனது பதிலை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சாதாரண முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் பெறப்படும் கட்டணம்தான், முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களிலும் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகம் பெறப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு சலுகையாக, 2024-25ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்காக ரூ.60,239 கோடி மத்திய அரசு மானியங்கள் வழங்கியுள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.