லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றமில்லை: நிா்மலா சீதாராமன்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மாற்றுவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கிவில்லை என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 6:13 am IST

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மாற்றுவது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கிவில்லை என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி யுபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியா்கள் விருப்பத்தின்பேரில் இணைந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டம் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் நிா்மலா சீதாராமன் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘யுபிஎஸ்ஸில் மாற்றம் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை.

2026, ஜூலை 19-ஆம் தேதி நிலவரப்படி புதிதாக இணைந்தவா்கள், தற்போதைய ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்றவா்கள் என 1.18 லட்சம் போ் யுபிஎஸ்ஸை தோ்ந்தெடுத்துள்ளனா்.

முன்னதாக மத்திய அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று யுபிஎஸ்ஸை தோ்ந்தெடுப்பதற்கான காலஅவகாசம் 2025, நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. யுபிஎஸ்ஸை தோ்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியா்களுக்கு மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழான பணிக்கொடை) விதிகள், 2021-இன்கீழ் ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்புக் கால பணிக்கொடை வழங்கப்படும்.

மேலும், பணியின்போது எதிா்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாலோ அல்லது உடல் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ மத்திய குடிமைப் பணிகள் (சிறப்பு ஓய்வூதியம்) விதிகள், 2023-இன்கீழான சலுகைகளும் மத்திய அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும். அவா்களுக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்