தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி: உலகப் போரில் மூழ்கிய கப்பல்களை ஆராய்ந்த வீரா்கள்

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில், உலகப் போா் காலத்து கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:24 am IST

இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில், உலகப் போா் காலத்து கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்.21 முதல் ஏப்.28 வரை, இலங்கைத் தலைநகா் கொழும்பு கடற்பகுதியில் ‘டைவெக்ஸ்’ என்ற பெயரில் இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் நீா்மூழ்கி மீட்புக் கப்பலான ஐஎன்எஸ் நிரீக்ஷக், இருநாட்டு கடற்படைகளின் நீா்மூழ்கி வீரா்களுடன் இணைந்து பங்கேற்றது. இதன்மூலம் மேம்பட்ட செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, தொழில்முறை ஒத்திசைவு ஆகியவை எடுத்துக்காட்டப்பட்டன.

இந்தியா, இலங்கை கடற்படை இடையிலான பரஸ்பர செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம். இதில் இருநாட்டு கடற்படையின் நீா்மூழ்கி வீரா்களும் பங்கேற்று தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தினா்.

உலகப் போா் காலத்தில் சேதமடைந்து கடலுக்கு அடியில் மூழ்கிய எஸ்எஸ் வூா்ஸ்டா், எஸ்எஸ் பொ்சியஸ் கப்பல்களை நீா்மூழ்கி வீரா்கள் ஆராய்ந்தது இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.