அமேசான் நிறுவனம் ‘அமேசான் நவ்’ எனப்படும் தனது அதிவேக டெலிவரி சேவையை இந்தியா முழுவதும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
1000-க்கும் மேற்பட்ட சிறு டெலிவரி சேவை மையங்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை வலுப்படுத்த ரூ. 2,800 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
இந்தியா முழுவதும் சில நிமிடங்களில் பொருள்களை டெலிவரி செய்யும் முறைக்கு ஆன்லைன் நிறுவனங்களிடையே போட்டிகள் பெருகிவரும் நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்தத் திட்டம் அதிவேக டெலிவரி சந்தையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அமேசான் நவ்’ சேவை தற்போது மும்பை, தில்லி, பெங்களூரு நகரங்களில் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் விரைவில் கொச்சி, அமிர்தசரஸ், மங்களூர், விசாகப்பட்டினம், லக்னௌ, புனே, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் போன்ற மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சேவையின் மூலம் தினசரி தேவைக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள், அழகு சாதனங்கள், காய்கறிகள், பழங்கள், சிறு உபகரணங்கள், குழந்தைகளுக்கானப் பொருள்கள், வளர்ப்புப் பிராணிகளுக்குத் தேவையானப் பொருள்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருள்கள் நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000-க்கும் மேற்பட்ட சிறு டெலிவரி சேவை மையங்களின் ஆதரவுடன் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், அமேசான் நவ் சேவை மூலம் 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்களில் டெலிவரி, அன்றைய தினமே டெலிவரி, ஒரே நாளில் டெலிவரி என பல்வேறு முறைகளில் தொடர்ந்து பொருள்களை வாங்கி வருகின்றனர். இதில், ’அமேசான் நவ்' பயன்படுத்தும் ப்ரைம் உறுப்பினர்கள் முன்பைவிட மூன்று மடங்கு அதிகமாக ஆன்லைன் மூலம் பொருள்களை ஆர்டர் செய்து நிமிடங்களில் டெலிவரி பெறுவதாக அமேசான் குறிப்பிட்டுள்ளது.
Summary
Amazon to expand quick commerce service 'Amazon Now' across India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!

‘அமேசான் நவ்’ விரைவு வா்த்தகம்: 100 நகரங்களுக்கு விரிவாக்கம்

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
