பாஜகவின் இணைந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா, முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறித்தும், அக்கட்சிக்கு எதிராகவும் ராகவ் சத்தா திங்கள்கிழமை விடியோ பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”நான் ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. எனது தொழில் வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன். ஒரு அரசியல் கட்சியின் நிறுவன உறுப்பினராக, எனது இளமையின் பொற்காலமான பதினைந்து ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காக அர்ப்பணித்தேன்.
தற்போது இருக்கும் கட்சி, பழைய கட்சி கிடையாது. கட்சிக்குள் நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் நிலவுகிறது. பணி செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் பேசுவதில் இருந்தும் தடுக்கப்பட்டேன்.
கடந்த சில ஆண்டுகளாக, நான் சரியான நபராக இருந்து, தவறான கட்சியில் இருக்கிறேனோ என்று உணர்ந்தேன். அரசியலை விட்டு விலகுவது, உட்கட்சி சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்வது அல்லது மாற்று அரசியல் தளத்துக்கு செல்வது ஆகிய மூன்று பரிசீலனையை மேற்கொண்ட பிறகே பாஜகவில் இணைந்துள்ளேன்.
ஒருவரோ அல்லது இருவரோ தவறான முடிவை எடுக்கலாம். ஆனால், 7 பேர் தவறான முடிவெடுக்க வாய்ப்பில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
A 'Toxic' Work Environment in the Aam Aadmi Party! Raghav Chadha Opens Up!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரவிந்த் கேஜரிவாலுடன் மமதா பானர்ஜி சந்திப்பு!

பாஜகவில் இணைந்த ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி!
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


