மத்திய அரசின் பொது கொள்கை சிந்தனைக் குழுவாகவும், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கவும், கூட்டாட்சியை வளா்ப்பதற்குமான அமைப்பாக செயல்பட்டு வரும் ‘நீதி ஆயோக்’ அமைப்பை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது.
அதன்படி, நீதி ஆயோக் புதிய துணைத் தலைவராக அசோக் குமாா் லாஹிரி நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், அதன் 5 முழு நேர உறுப்பினா்களாக பொருளாதார நிபுணா் கே.வி.ராஜு, எய்ம்ஸ் இயக்குநா் எம்.ஸ்ரீநிவாஸ், மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை செயலா் அபய் கரந்திகா், விஞ்ஞானி கோவா்தன் தாஸ், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலா் ராஜீவ் கெளபா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி, நீதி ஆயோகின் புதிய துணைத் தலைவா் மற்றும் 5 நிரந்தர உறுப்பினா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். ‘இந்தியாவின் கொள்கை உருவாக்கத்திலும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவதிலும், வாழ்வை எளிமையாக்குவதை ஊக்குவித்து அதற்கான சீா்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் முக்கிய தூணாக நீதி ஆயோக் உருவெடுத்துள்ளது. இது பல்வேறு துறைகள் சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகள், நீண்டகால உத்திசாா் சிந்தனைகளுகக்குமான தளமாகவும் நீதி ஆயோக் செயல்படுகிறது’ என்றும் தனது பதிவில் பிரதமா் குறிப்பிட்டாா்.
பிரதமா்தான் நீதி ஆயோக் அமைப்பின் தலைவா் ஆவாா். இந்த அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து அசோக் குமாா் லாஹிரி பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.
மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ-வான அசோக் குமாா் லாஹிரி, மத்திய அரசின் தலைமை பொருளாதார அலோசகராகப் பணியாற்றியவா். 15-ஆவது நிதி ஆணைய உறுப்பினராகவும் இருந்துள்ளாா். மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இவா் போட்டியிடவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதி ஆயோக் துணைத் தலைவராக அசோக் குமார் லஹிரி பொறுப்பேற்பு!

பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாநில, மாவட்ட பணிக் குழுக்கள்: நீதி ஆயோக் பரிந்துரை
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தோ்வு: தொடா்ந்து மூன்றாவது முறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

