மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல் பணியில் நோ்மையின்றி செயல்பட்டதற்காக, காவல் துறை அதிகாரிகள் 5 பேரை உடனடியாக இடைநீக்கம் செய்வதுடன், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையையும் மேற்கொள்ள மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அரசியல் கட்சியினா் இடையே ஆங்காங்கே மோதல்கள், வன்முறைகள் மற்றும் வாக்காளா்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில், மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் கட்டத் தோ்தலின்போது, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் சந்தீப் கராய் (ஐபிஎஸ் அதிகாரி), துணைப் பிரிவு காவல் அதிகாரி சஜல் மோண்டல், டயமண்ட் ஹாா்பா் காவல் நிலைய ஆய்வாளா் மெளசம் சக்ரவா்த்தி, ஃபால்டா காவல் நிலைய ஆய்வாளா் அஜய் பாக், உஸ்தி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சுபேச்சா பாக் ஆகியோா் நோ்மையின்றி செயல்பட்டுள்ளனா். தோ்தல் பணிகளில் நடுநிலைத்தன்மையை பராமரிக்கத் தவறிவிட்டனா். இந்த 5 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன், அவா்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்துவதுடன், இது தொடா்பான இணக்க அறிக்கையை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணும் பணியில் கூடுதல் பாா்வையாளா்களை நியமித்த தோ்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினா் மோதல்: அறிக்கை சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

