நாசிக்கில் அமைந்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒரு சில பெண்களே முன்வந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தாங்கள் தப்பியதே பெரிய விஷயம் என்று கண்ணீருடன் பேசுகிறார்கள். டிசிஎஸ்-நாசிக் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்களை ஊடகங்கள் தொடர்பு கொண்டு, என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கிறது.
நாசிக்கில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு முதலில் கொடுக்கப்படும் டாஸ்க் என்னவென்றால், அலுவலகத்தில் உள்ள இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்துகொள்ளுங்கள். அவர்களை உங்களது மதத்துக்கு மாற்றுங்கள். முஸ்லிம் மதத்தைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள் என்பதே. இதற்காக இளைஞர்களுக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது. இது 2021 முதல் நடந்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரியே பணம் கொடுத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எட்டு பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக 9 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அங்குள்ள பெண்களை திருமண வாக்குறுதி கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். பெண்கள் நிர்வாகத்திடம் கொடுத்த எந்தப் புகாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை.
மனிதவள அதிகாரி நிதா கான்தான் அனைத்துக் குற்றங்களுக்கும் பெண் கேப்டன் போல செயல்பட்டுள்ளார்.
புதிதாக பணிக்கு வரும் பெண்கள், டிசிஎஸ் அலுவலகம் இயங்கும் கட்டடத்தின் மொட்டை மாடியில் தனிமைப்படுத்தப்பட்டு பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். செல்போன் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் பிடுங்கிக் கொண்டு, தனிமையில் பணியாற்றும்போது கடும் அச்ச உணர்வு ஏற்பட்டதாகவும், கழிப்பறை போன்றவற்றுக்காக அலுவலகத்துகுள் செல்லும்போதுகூட செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படாது, பெண்கள் நமாஸ் செய்யவும் ரமலான் நோன்பிருக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பெண்கள் கூறுகிறார்கள்.
Summary
What happened to them at the TCS office in Nashik, Women in tears!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்

பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - கண்ணீருடன் குடும்பத்தினர்!

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


