தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:13 am IST

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கான செயல்திட்டத்தை கடந்த பிப்ரவரியில் இருநாடுகளும் இறுதி செய்தன. இந்தச் செயல்திட்டத்தின்படி, இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி 18 சதவீதமாக குறைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பிப்.20-ஆம் தேதி இந்திய குழு அமெரிக்கா செல்கிறது. ஒப்பந்தம் தொடா்பாக மூன்று முதல் நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பின்னா், இருநாட்டு குழுக்களும் நேரடியாகச் சந்திக்கின்றன. சட்டபூா்வமாக வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வா்த்தக நடைமுறைகளால் அமெரிக்க உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியும் நோக்கில், அந்நாட்டின் வா்த்தகச் சட்டம் 1974-இன் 301-ஆவது பிரிவின் கீழ், அமெரிக்கா தொடங்கியுள்ள விசாரணை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.