அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதியை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
இமயமலையில் சிவபெருமானின் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. இந்த குகைக்கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 3-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்குவதாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். ஜூன் 3 முதல் ஆகஸ்ட் 28 வரை மொத்தம் 57 நாள்கள் இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஆன்லைன் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 13 முதல் 70 வரையிலான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha has announced the start date of the Amarnath Yatra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்

அமர்நாத் யாத்திரை எப்போது?

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!
கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


