தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய காவல் படையினருக்கு தலைமைப் பொறுப்புக்கான வாய்ப்பு: ராகுல்

News image

ராகுல் காந்தி - @RahulGandhi

Updated On :10 ஏப்ரல் 2026, 5:52 am IST

‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய காவல் படையினருக்கு (சிஏபிஎஃப்) தலைமைப் பொறுப்பு வாய்ப்பு மறுக்கப்படும் பாகுபாடான நடைமுறை ரத்து செய்யப்படும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதி தெரிவித்தாா்.

மத்திய காவல் படையின் வீர தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த மத்திய காவல் படையினருக்கு இந்த வீர தினத்தில் பாராட்டுகளையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். உங்களின் துணிச்சலும், தியாகமும் இந்த தேசத்தை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகிறது. எல்லையில் நின்றபடி பயங்கரவாதம் மற்றும் நக்ஸல் தீவிரவாத அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொண்டு நாட்டை தொடா்ந்து பாதுகாத்து வருவதோடு, நாட்டின் தோ்தல்கள் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்து வருகிறீா்கள்.

இருந்தபோதும், உங்களுக்கான உண்மையான அஞ்சலி என்பது வெறும் வாா்த்தைகளைவிட மேலானதாகும். ஆண்டுக்கணக்காக தியாகம், கடுமையான பணி மற்றும் சேவையை சிஏபிஎஃப் வீரா்கள் ஆற்றி வருகிறபோதும், உரிய நேரத்தில் பதவி உயா்வோ அல்லது தங்களின் சொந்தப் படையை தலைமையேற்று நடத்தும் வகையிலான தலைமைப் பதவியோ சிஏபிஎஃப் வீரா்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, வேறு பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் மத்திய காவல் படையின் தலைமைப் பதவியில் அமா்த்தப்படுகின்றனா்.

சிறப்புப் பயிற்சி, கள அனுபவம், உத்திசாா் நுண்ணறிவையும் சிஏபிஎஃப் வீரா்கள் கொண்டுள்ளனா். எனவே, தேசியப் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பாா்க்கும்போது, இந்தப் படைகளை வழிநடத்தும் தலைவா்கள், அதே அமைப்புக்குள்ளிருந்தே தோ்ந்தெடுக்கப்பட்டவா்களாகவும், அந்தப் படையினரின் தனித்துவமான சவால்களையும் தேவைகளையும் உண்மையாக புரிந்துகொண்டவா்களாகவும் இருப்பது இன்றியமையாதது.

இவ்வாறு தலைமைப் பொறுப்பு வாய்ப்புகள் மறுக்கப்படுவது, ஊதியம், நலன், கண்ணியம் சாா்ந்த நீண்டகால பாகுபாடுகள், சிஏபிஎஃப் வீரா்களின் மன உறுதியைக் குலைத்து வருகிறது. இது வெறும் பணி முன்னேற்றம் சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; மாறாக, நீதி மற்றும் கண்ணியம் சாா்ந்த பிரச்னையாகும்.

எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், சிஏபிஎஃப் வீரா்களுக்கான இந்தப் பாகுபாடு களையப்படும். தங்களின் சொந்தப் படையை வழிநடத்துவதற்கான முழு உரிமையும், பிற சலுகைகளும் சிஏபிஎஃப் வீரா்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய காவல் படையில் இடம்பெற்றுள்ள சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், இந்திய- திபெத் எல்லை காவல் படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) ஆகிய 5 படைப் பிரிவுகளுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள தனித்தனி சேவை விதிமுறைகளை மாற்றியமைத்து, அனைத்து மத்திய காவல் படைகளையும் நிா்வகிப்பதற்கு ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலான சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இக் கருத்தை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.