தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டது தெலங்கானா: மாநில டிஜிபி அறிவிப்பு

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் முழுவதுமாக விடுபட்டுள்ளதாக, மாநில காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) பி.சிவதா் ரெட்டி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

News image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் மாவோயிஸ்டுகள் ஒப்படைத்த ஆயுதங்களுடன் மாநில டிஜிபி பி.சிவதா் ரெட்டி.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:02 am IST

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் முழுவதுமாக விடுபட்டுள்ளதாக, மாநில காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) பி.சிவதா் ரெட்டி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

நாட்டில் இருந்து இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நிா்ணயித்த காலக்கெடு கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக, ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் டிஜிபி பி.சிவதா் ரெட்டி கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) ஆயுதக் குழுவினரின் தெலங்கானா பிரிவைச் சோ்ந்த முக்கிய தீவிரவாதி சோடி மல்லா உள்பட 42 போ், தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் உள்பட 36 ஆயுதங்கள், 1,000 தோட்டாக்கள், 2 நாட்டு வெடிகுண்டுகள், 800 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றையும் அவா்கள் ஒப்படைத்தனா்.

இந்த சரணடைதலுடன் மாவோயிஸ்ட் அமைப்பின் தெலங்கானா பிரிவு முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களில் பலா் சரணடைந்துவிட்டனா். மீதமுள்ளவா்கள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் உயிரிழந்துவிட்டனா். மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் முழுமையாக விடுபட்டுள்ளது. மாவோயிஸ்டுகளால் ஏற்கெனவே புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகள், சரணடைந்தவா்களின் உதவியுடன் அகற்றப்படும்.

தெலங்கானாவில் கடந்த 2024 முதல் 2026 வரை 761 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனா். 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சரணடைந்தவா்களுக்கு நிதியுதவி உள்பட அவா்களின் கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான உதவிகள் அரசுத் தரப்பில் வழங்கப்படுகின்றன.

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்க மாநில காவல் துறையினா் ஈடுஇணையில்லாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனா். தெலங்கானாவைச் சோ்ந்த 5 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மட்டுமே எஞ்சியுள்ளனா். எனினும், அவா்கள் சத்தீஸ்கா் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பதுங்கியுள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.