நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நியமிக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.
பிகார் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக 2014 ஆம் ஆண்டு தேர்வான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண், தொடர்ந்து இரண்டாவது முறையாக 2020 ஆம் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 2020 முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பொறுப்பேற்ற ஹரிவன்ஷ் நாராயணின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது.
இவருக்கு மீண்டும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதத்துடம் நிறைவடைந்தது.
இதையடுத்து அந்த இடத்துக்கு ஹரிவன்ஷ் நாராயணை நியமிக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதன்மூலம், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் ஹரிவன்ஷ் நாராயண் தொடர்ந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Harivansh Narayan Appointed as Nominated Member of the Rajya Sabha!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவை: மூன்றில் இரு பங்கு பலம்பெற தே.ஜ. கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் தேவை?

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தோ்வு: தொடா்ந்து மூன்றாவது முறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


