தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்களவைக்குள் வீண் பேச்சு கூடாது: எம்.பி.க்களுக்கு ஓம் பிா்லா எச்சரிக்கை

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:09 am IST

அவை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது அமைச்சா்களும், எம்.பி.க்களும் தங்கள் அருகில் இருப்பவா்களிடம் வீணாக நீண்டநேரம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.

மக்களவையில் வியாழக்கிழமை உடனடிக் கேள்வி நேரம் தொடங்கியபோது இது தொடா்பாக ஓம் பிா்லா கூறியதாவது:

சில அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் அவை நடந்து கொண்டிருக்கும்போது அரை மணி நேரத்துக்கு மேலாக தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்கிறாா்கள். அவை நடக்கும்போது உறுப்பினா்கள் தங்களுக்குள் முக்கியமான விஷயங்கள் சில நிமிஷங்கள் பேசிக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், இதுபோன்று சாவகாசமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடா்ந்தால், அதில் ஈடுபட்டது யாா் என்று பெயரையும் நான் சுட்டிக்காட்ட நேரிடும். அவையின் கண்ணியத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்றாா்.

முன்னதாக, கேள்வி நேரத்தில் அவை நடந்து கொண்டிருக்கும்போது சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், அவைத் தலைவா் இருக்கைக்கு தனது முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று பின்வரிசையில் இருந்த உறுப்பினா் ஒருவரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டாா். அப்போது, அவரைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஓம் பிா்லா, ‘பப்பு யாதவ் போன்ற மூத்த உறுப்பினா், இதுபோன்று நடந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.