தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி தாக்கு!

பிரதமர் மோடி அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி விமர்சனம்...

News image

பிரியங்கா காந்தி (கோப்புப் படம்) - PTI

Updated On :2 ஏப்ரல் 2026, 8:03 pm IST

எரிபொருள் விலை அதிகரித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய வயநாடு மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்கா காந்தி, எரிபொருள் விலைவுயர்வு விவகாரத்தில் இந்தியாவுக்காக பிரதமர் மோடி துணிந்து நிற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“எல்.பி.ஜி. உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் வர்த்தகம் மேலும் கடினமான நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இவை அனைத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காகத் துணிந்து நிற்கவில்லை. அவர் செய்வது எல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பணிந்துபோவது மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அசாமில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கேரளத்தில் வரும் ஏப். 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Priyanka Gandhi has criticized PM Modi, is bowing down to the US and Israel amidst the rise in fuel prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.