ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அஸ்ஸாமில் மோடி! தேயிலைப் பறித்து பெண் தொழிலாளர்களுடன் உரையாடல்!

அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத்தில் மோடியின் கலந்துரையாடல் பற்றி...

News image

தேயிலைத் தோட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி - X / Modi

Updated On :1 ஏப்ரல் 2026, 11:52 am IST

அஸ்ஸாம் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுடன் புதன்கிழமை கலந்துரையாடினார்.

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவும் நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

இந்த நிலையில், அஸ்ஸாமில் நடைபெறும் இரு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள மோடி, திப்ருகர் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு இன்று காலை சென்றுள்ளார்.

அங்கு பெண் தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலைப் பறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

Story image

அந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ”ஒவ்வொரு தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் குடும்பத்தின் முயற்சிகளை நினைத்து பெருமைக் கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அஸ்ஸாமின் பெருமையை உயர்த்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Modi in Assam! Plucks tea leaves and interacts with women workers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.