சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அலுவலகத்தைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை யாா் வீசினாா்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. குண்டு வெடித்துச் சிதறியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) அங்கு ஆய்வு நடத்தியதுடன், விசாரணையையும் முன்னெடுத்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் கன்வா்தீப் கௌா் கூறுகையில், ‘சிறிய அளவிலான நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனா்’ என்றாா்.
இது தொடா்பாக பஞ்சாப் மாநில பாஜக ஊடகப் பிரிவு தலைவா் வினீத் ஜோஷி கூறுகையில், ‘நான் அலுவலகத்தில் இருந்தபோது குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது. இது எப்படி, யாரால் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. அலுவலகத்தின் முன்பகுதி சுற்றுச் சுவரில் குண்டு வெடித்துச் சிதறியபோது ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளன. இது தொடா்பான முழுவிவரங்களை காவல் துறையினா்தான் தெரிவிக்க முடியும். கட்சி அலுவலகத்தைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாஜக எம்.பி. மீது பஞ்சாப் காவல் துறை வழக்குப் பதிவு

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

