கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

1.6.1976: தானியத்தைச் சேமிக்க பள்ளிக் கட்டடங்களும் பயன்படுத்தப்படலாம்

தானியத்தைச் சேமிக்க பள்ளிக் கட்டடங்களும் பயன்படுத்தப்படலாம்...

News image

1.6.1976 - Dinamani

Updated On :1 ஜூன் 2026, 4:07 am IST

புது டில்லி, மே.31- அமோக விளைச்சல், சாதனையான கொள்முதல் ஆகியவற்றின் விளைவாக தானியங்களைச் சேமித்து வைப்பதில் கிடங்கு பற்றாக்குறைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க அரசுத் துறை மற்றும் தனியார் துறையில் உள்ள உபரி கிடங்கு வசதிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன என்று மத்திய விவசாய மந்திரி ஜெகஜீவன்ராம் இங்கு நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.

உணவுத் தானியங்களைச் சேமித்து வைக்க தாற்காலிகமாகப் பள்ளி, கல்லூரிக் கட்டடங்களையும் பயன்படுத்த வேண்டி வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கிடங்குப் பிரச்னை காரணமாக ராஜஸ்தானில் கோதுமையைச் சேமித்து வைக்க முன்னாள் மகாராஜாக்களின் கோட்டைகளும், மாளிகைகளும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக மந்திரி தெரிவித்தார்.

இன்று மொத்த உணவு தானிய இருப்பு சுமார் 1 கோடியே 40 லட்சம் டன். இதில் சுமார் 40 லட்சம் டன் நடைமுறைத் தேவைக்கானது. கோதுமை கொள்முதலுக்கு 52 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுமார் 48 லட்சம் டன் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் மந்திரி ஜெகஜீவன்ராம் தெரிவித்தார். இந்தியா இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரதான உணவு ஏற்றுமதி நாடாகிவிடலாம் என்று மந்திரி நம்பிக்கை தெரிவித்தார்.

கிருஷ்ணா தகராறு போன்ற நதி நீர்த் தகராறுகள் தீர்க்கப்பட்டுள்ளதன் பலனாக இந்தியா உணவு தானிய விஷயத்தில் தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், கணிசமான அளவில் உணவு தானியத்தை ஏற்றுமதி செய்யும் வழி ஏற்படும் என்று அவர் கூறினார். ...

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தாவா தீர்ந்தது - 3 மாநிலங்கள் பங்கு பற்றி டிரிபுனல் தீர்ப்பு

புது டில்லி, மே. 31- கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தகராறு டிரிப்யூனல் மூலம் தீர்ந்தது நாட்டிலேயே முதல் தடைவையாக நதிநீர் தாவா டிரிப்யூனல் மூலம் தீர்வு காணப்படுகிறது.

இதனால், சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மூன்று ராஜ்யங்களுக்கு தண்ணீர் பங்கீடு வரையறுக்கப்பட்டுவிட்டது.

மத்திய அரசு 1969 -ல் இந்த டிரிப்யூனலை நிறுவி, கிருஷ்ணா நதி நீர் பிரச்னையை அதன் தீர்ப்புக்கு விட்டது.

மகாராஷ்டிரத்துக்கு 56,000 கோடி கனஅடி நீரும், கர்நாடகத்துக்கு 70,000 கோடி கனஅடி நீரும், கிடைக்கும். மீதத் தண்ணீர் ஆந்திராவுக்குக் கிடைக்கும்.

இன்று இங்கு நிருபர்களிடையே மத்திய விவசாய மந்திரி ஜகஜீவன்ராம், டிரிப்யூனல் தீர்ப்பு பற்றி அறிவித்தார். டிரிப்யூனல் தீர்ப்பு இறுதியானது. 3 மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் என்றார். ...

Summary

School buildings may also be used to store grain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.