புது டில்லி, மே. 13 - பதவியிலிருந்து நீக்கப்பட்ட தி.மு.க. மந்திரிசபையைச் சேர்ந்த சிலர் மீது, செய்யப்பட்டுள்ள ஊழல், நிர்வாக முறைகேடு புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்க்காரியா கமிஷனின் முதல் கூட்டம் நாளை புது டில்லியில் நடக்கிறது.
பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
நடைமுறைகள், குற்றஞ்சாட்டப்பட்டவர் கிளப்பும் ஆட்சேபங்கள் போன்ற பூர்வாங்க பிரச்னைகள் இக் கூட்டத்தில் கவனிக்கப்படும்.
முன்னாள் முதன் மந்திரி கருணாநிதி, மற்றும் 6 முன்னாள் மந்திரிகள் ஆகியோரின் வக்கீல் ஆஜராவார். பூர்வாங்க விஷயங்கள் தீர்ந்த பிறகு, பிரமாண வாக்கு மூலங்கள் தாக்கல் செய்வதற்காக இந்த 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.
நாளைய தினம் கமிஷன் முன்பு ஆஜராவதற்காக கருணாநிதி, மாதவன், சாதிக் பாட்சா, ப.உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், ஆதித்தனார், ஓ.பி.ராமன் ஆகியோருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும், வலது கம்யூனிஸ்டு தலைவர் எம். கல்யாண சுந்தரமும் இந்த முன்னாள் மந்திரிகள் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமாக 57 திட்டவட்டமான புகார்கள் கூறியிருந்தனர். அதில் 27 புகார்கள் இந்தக் கமிஷன் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
விசாரணையின்போது, தனது விசாரணையின் வரம்பை விரிவுபடுத்தும் அதிகாரமும், இந்த ஜாபிதாவில் சேர்க்கப்பட்டிராத வேறு எந்த முன்னாள் மந்திரிக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கும் அதிகாரமும் கமிஷனுக்கு உண்டு.
விசாரணையுடன் சம்பந்தப்பட்ட எந்த நபரையும் சாட்சியமளிக்குமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரமும், விசாரணைக் கமிஷன் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் இந்தக் கமிஷனுக்கு உண்டு. அவசியமெனத் தோன்றினால், மேலும் புகார்களை இந்தக் கமிஷனுக்கு மத்திய சர்க்கார் அனுப்பி வைக்கலாம்.
Summary
May 14, 1976: Sarkaria Commission Inquiry Begins Today!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபருக்கு எதிராக சா்வேதச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உறுதி

23.4.1976: வன விலங்குகள், பறவைகள் வேட்டை, வியாபாரக் கட்டுப்பாடுகள்

இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு


