புது டில்லி, ஜூன். 17 - இந்தியா - பாகிஸ்தான் இடையே விமானத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளவும், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து ஸ்தாபனத்திடமிருந்து வழக்குகளை வாபஸ் பெறவும் இரு நாடுகளும் இன்றிரவு சம்மதித்தன. ஜூலை மூன்றாவது வாரத்தில் இரு நாடுகளிடை விமான தொடர்பு துவங்கும்.
4 தின பேச்சுக்களுக்குப் பின் ஏற்பட்ட உடன்பாட்டு தஸ்தாவேஜில் இரு கோஷ்டி தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து ஸ்தாபனத்திடம் 1971-ல் பாகிஸ்தான் தாக்கல் செய்த வழக்கையும், பதில் மகஜரையும் வாபஸ் பெறுவதற்கான சம்பந்தமான வழிமுறைகள் உடன்பாடு தஸ்தாவேஜிலும் இரு நாட்டு கோஷ்டிகளும் கையெழுத்திட்டன.
இரு நாடுகளிடையே விமானப் போக்குவரத்துத் தொடர்புகளையும், இரு நாடுகளின் வானவீதிகளின் வழியாக விமானங்கள் பறப்பதையும் மீண்டும் ஏற்படுத்துவதற்கான விவரங்களைத் தயாரிக்க இரு நாட்டு கோஷ்டிகளும் கடந்த 4 தினங்களாகப் பேச்சு நடத்தி வந்தன.
பேச்சு வார்த்தைகளில் நேற்று நள்ளிரவு வரை உடன்பாடு ஏற்படவில்லை. எனவே பாக். கோஷ்டி இஸ்லாமாபாத் திரும்புவது ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பேச்சு வார்த்தை நீடித்தது.
இந்திய கோஷ்டி தலைவர் ஏ. என். பட்நகரும். பாக். கோஷ்டி தலைவர் மொஹசின் கமலும் உடன்பாட்டு தஸ்தாவேஜிகளில் கையெழுத்திட்டனர். விமானப்போக்குவரத்துக்கான உடன்பாட்டில் இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் ஜூலை மூன்றாவது வாரம் கையெழுத்திடுவர்.
அதன் பின்னர் ஒரே சமயத்தில் விமானப் போக்குவரத்தும், வானவீதி வழியாக விமானங்கள் பறப்பதும் மீண்டும் துவங்கும். ...
இந்தியாவில் முதல் தடவையாக கிழங்கு சர்க்கரை உற்பத்தி
ஸ்ரீ கங்காநகர், ஜூன். 17 - பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்படும் கிழங்கு சர்க்கரை இந்தியாவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானி நிறுவனமான அரசுத் துறை ஸ்ரீ கங்கா நகர் சர்க்கரை, ஆலை இதை தயாரித்துள்ளது.
இந்த சீஸனில் இங்கு தயாரான மொத்த சர்க்கரை 10,30,000 மூட்டைகள். இதில் 24,935 மூட்டைகள் கிழக்கு சர்க்கரையாகும்.
சர்க்கரைக்கான பீட்ரூட் கிழங்கு இந்தியாவுக்கு ஒரு புதிய பயிர் வகையாகும். 1970-71 வருஷத்திலிருந்தே இந்த ஜில்லாவில் இது வர்த்தக ரீதியாகப் பயரிடப்பட்டு வருகிறது. இந்த வருஷம் பீட்ருட் மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் அளவை எட்டியுள்ளது. (ஹெக்டர் என் பது சுமார் 2.5 ஏக்கர்).
மாத கரும்பு பயிருக்கு 12 காலமாகிறது. ஆனால் பீட்ரூட் 6 மாதத்திலேயே சாகுபடியாகி விடுகிறது. இந்தியாவில் பீட் ரூட் சாகுபடிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக இந்த ஆலையின் பிரதம நிர்வாக அதிகாரி பாரத்வாஜ் கூறுகிறார்.
Summary
18.6.1976: Agreement signed for India-Pakistan air links starting in July.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் நல தினம் கொண்டாட்டம்

15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்

போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?

19.5.1976: இந்தியா - பாக். உடன்பாடு ஜூலை 17 - 24ல் அமல்!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு


