தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிஆர்டிஓ-இல் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

DRL Apprenticeship

ஆர்சிஐ தொழில்பழகுநர் பயிற்சி - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 3:17 pm IST

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்கீழ்(டிஆர்டிஓ) செயல்படும் அப்துல் கலாம் ஏவுகணை வளாகம் ஆய்வு மையத்தில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்.28-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RCI/HRD/Apprenticeship/Advt/2027

பயிற்சி: Graduate Apprentice

காலியிடங்கள்: 50

தகுதி: மின்னணுவியல், இயந்திரவியல், மின் தொடர்புப் பொறியியல், வேதியியல் பொறியியல், உலோகவியல் பொறியியல், வானூர்தியியல், விண்வெளி, சிவில் பொறியியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் பட்டம் பெற்றி ருக்க வேண்டும்.

பயிற்சி: Trade Apprentice

தகுதி: ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், மெக்கானிக்-டீசல், எலக்ட்ரானிக்-மெக்கானிக், எலக்ட்ரீஷியன், கோபா (கணினி ஆப்பரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட்), டிராஃப்ட்ஸ்மேன் இன்ஜினியரிங் (மெக்கானிக்) மற்றும் கிரைண்டர் ஆகிய டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்

பயிற்சி: Technician

காலியிடங்கள்: 30

தகுதி: மின்னணுவியல், இயந்திரவியல், மின்னணுவியல், கருவியியல், கணினி அறிவியல், வேதியியல், உலோகவியல், பாதுகாப்பு ஆகிய ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா பத்து ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

மேற்கண்ட கல்வித்தகுதியில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர் விற்கு அழைக்கப்பட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேவைப்படும் பட்சத்தில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

இது குறித்த விவரம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டிஆர்டிஓ விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஐடிஐ முபடித்தவர்கள் www. apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் www.nats.edu cation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்க ளைப் பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ நிறுவன இணையதள லிங்கை ஐ பயன்படுத்தி விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

RCI Apprenticeship...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.