பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ராணுவத்தில் இலவசப் பயிற்சியுடன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

இந்திய இராணுவ தொழில்நுட்பப் பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

INDIAN ARMY 10+2 TECHNICAL ENTRY SCHEME - 57

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ராணுவத்தில் இலவசப் பயிற்சியுடன் வேலை - INDIAN ARMY

Published On :1 நவம்பர் 2026, 4:02 pm IST

இந்திய இராணுவ தொழில்நுட்பப் பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு...

பயிற்சியின் பெயர்: 10 + 2 Technical Entry Scheme (57th Course)

காலியிடங்கள்: 90

வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026-பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

உடற்திறன் தகுதி: 10½ நிமிடத்திற்குள் 2.4 கி.மீ. தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ் - 40, சிட்டப்ஸ் - 30, புல்அப்ஸ் -6 எடுக்க வேண்டும். மேலும் ஸ்க்வாட்கள், லஞ்சுகள், நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது நிலை - 1 மற்றும் நிலை - II என இருகட்டங்களாக நடைபெறும்.

நிலை - 1 தேர்வில் உளவியல் கேள்விகள் கேட்கப்படும் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நிலை- II-ல் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: Allahabad (UP), Bhopal (MP), Bengaluru (Karnataka) Kapurthala (Punjab).

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு பிப்ரவரி, மார்ச் 2027-ல் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும்.

பணிக்கு தேர்வு செய்யப் படுபவர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவப் பயிற்சி மூன்று ஆண்டுகளும், ராணுவ தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு ஆண்டும் வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணி அமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் சரியான நாள், பயிற்சி ஆரம்பமாகும் நாள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.Joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் போது கல்வித்தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ் மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு - 2026 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற் றின் அசல் மற்றும் நகல்கள், ஆன்லைன் விண்ணப்பித்த பிரிண்ட்அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Application will only be accepted online. To do so the candidate needs to click on the ‘online application’ button on website...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.