ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டுப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

News image

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (எஸ்ஏஐ) விளையாட்டுப் பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூன் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணி: Assistant Coaches

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: Sports Authority of India, National Institute of Sports அங்கீகாரம் பெற்ற விளையாட்டுப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியாளருக்கான படிப்பை முடித்து மத்திய, மாநில அரசு விளையாட்டுத் துறையில் பயிற்சியாளராக இருக்க வேண்டும் அல்லது பயிற்சியாளர் படிப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப்பிரிவுகள் ஏதாவதொன்றில் சர்வதேச, தேசிய அளவிலானப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது விளையாட்டுப் பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் துறை சாதனைகள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத் தேர்வில் Sports Science,General Awareness,Reasoning Aptitude,Specific Sports Knowledge தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.6.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Invite Applications For The Following Assistant Coaches To 100 Posts In Sports Authority Of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.