இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 'ஏ' அட்டவணை மற்றும் 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே நிதி நிறுவனம் லிமிடெட் (ஐஆர்எப்சி). இந்நிறுவனம் ரயில்வேக்கு 'ரோலிங் ஸ்டாக்' (என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டிகள்) மற்றும் பல்வேறு ரயில்வே திட்டங்களை குத்தகைக்கு விடுவதே முதன்மையான பணியாகும். இந்த திட்ட வசதிகளுக்கு தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, பல்வேறு நிதிச் சந்தைகளிலிருந்து பலதரப்பட்ட நிதிசார் உத்திகள் மூலம் நிதி வளங்களை ஈட்டுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில், இந்திய அரசாங்கத்தால் ஐஆர்எப்சி தொடர்ந்து 'சிறப்பாக' செயல்பட்டு வருகிறது. 2025 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் மொத்த வரவு ரூ. 27,152.14 கோடியாகவும், நிகர மதிப்பு ரூ. 52,667.77 கோடியாகவும் உள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது, காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 01/ 2026; Dated 04.04.2026
பணி: Assistant (NES Level)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.21,000 - 74,000
தகுதி: வணிகவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் முடித்து ஐசிஏஐ இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Finance)
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000
தகுதி: வணிகவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ, சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரி வினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் தவிர, இதர அனைத்து பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://irfc.co.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
IRFC invites applications through ONLINE MODE for recruitment to the posts of Assistant (NE5 Level) and Assistant Manager...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!

என்டிபிசி நிறுவனத்தில் உதவி அலுவலர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

நர்சிங் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!

பொதுத்துறை நிறுவனத்தில் கணக்காளர், உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


