சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று(மார்ச் 23) இறுதி செய்யப்பட்டு கையொப்பமானது.
அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
தேசிய ஜனநாயக் கூட்டணி தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, நிச்சயம் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம்.
நாங்கள் தில்லி சென்றாலே பயப்படுகிறார் ஸ்டாலின். மேலும், அவதூறு பரப்புவதை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.
கருத்துகளை பரிமாறவே தில்லிக்கு சென்றோம். திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இறுதியாகவில்லை. வேண்டுமென்றே திமுக தலைவர், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எங்கள் மீது அவதூறு கருத்துகளைப் பரப்புகின்றனர்.
பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முழுமையான தொகுதிப் பங்கீடு விவரம் தெரிவிக்கப்படும்.
தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுடன் இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்று அறிவிக்கப்படும். இரவுக்குள் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர், அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த விவரம் தெரியவரும்” என்றார்.
Summary
AIADMK General Secretary Edappadi K. Palaniswami has clarified how many constituencies the party will contest in the assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவா? அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை!
ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியதே திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

