தவெகவுக்கு ஆதரவளித்தது பற்றி விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விசிக இன்று ஆதரவு கடிதம் அளித்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இதுபற்றி இன்று செய்தியாளர்களுடன் பேசினார்.
அதில், “தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்றும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2-ல் வெற்றி பெற்றது. அதேபோல, இடதுசாரிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்கள் நல கூட்டணி உருவான காலத்திலிருந்து கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். மக்கள் பிரச்னையில் ஒருங்கிணைந்து களமாடியிருக்கிறோம். ஆகவே, இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கும் சூழலில் நாங்கள் தொலைநோக்கு பார்வையோடு எதிர்கால அரசியலையும் கருத்தில் கொண்டு அதனடைப்படையில் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலக் குழுவைக் கூட்டி தவெகவுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, விசிக உயர்நிலைக் குழு கூட்டப்பட்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடப்பட்ட நிலையில், நிறைவாக கட்சியின் தலைவர் இறுதி முடிவை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த அரசியல் சூழ்நிலையைக் காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வரக்கூடாது
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவளிக்க விசிக முடிவெடுத்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையிலும், 108 இடங்களில் வெற்றிபெற்றும் தவெக ஆட்சியமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஆட்சியமைக்க விசிக ஆதரவளிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் இந்த ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளோம்.
இதுவே, எங்கள் இறுதி நிலைப்பாடு. இடதுசாரிகளின் நிலைப்பாட்டை ஒட்டியே நாங்கள் முடிவெடுப்போம் என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். அதேபோல, நாங்கள் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
Summary
Why Support the TVK? Thirumavalavan Explains!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு, திமுக கூட்டணியிலிருந்து விலகுவது ஏன்? காதர் மொகிதீன் விளக்கம்!
தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை கம்யூனிஸ்ட், விசிக கட்சியினா் விரைவில் உணா்வா்! - டிடிவி. தினகரன்
பேரவையில் தவெகவுக்கு ஆதரவு ஏன்? அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏன்? எஸ்.பி. வேலுமணி பதில்!

விசிகவின் நேர்மை அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும்! திருமாவளவன்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
