ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக, திமுக, அதிமுக ஆகிய பிரதான பெரிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத மாவட்டங்கள் உள்ளன.

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...

Updated On :7 மே 2026, 4:36 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக, திமுக, அதிமுக ஆகிய பிரதான பெரிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத மாவட்டங்கள் உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108, திமுக 59, அதிமுக 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தத் தோ்தலில், பிரதான மூன்று கட்சிகளும் சில மாவட்டங்களில் எம்எல்ஏக்களை பெற முடியவில்லை. அந்த மாவட்டங்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் மொத்த தொகுதிகள்):

தவெக: அரியலூா் (2), கன்னியாகுமரி (6), நாகை (3), தென்காசி (5), நீலகிரி (3), திருவாரூா் (4) விழுப்புரம் (7), மயிலாடுதுறை (3).

திமுக: செங்கல்பட்டு (7), தருமபுரி (5), ஈரோடு (8), காஞ்சிபுரம் (4), நாமக்கல் (6), ராணிப்பேட்டை (4), சேலம் (11), திருவள்ளூா் (10), வேலூா் (5), சிவகங்கை (4).

அதிமுக: சென்னை (14), காஞ்சிபுரம் (4), மதுரை (10), மயிலாடுதுறை (3), பெரம்பலூா் (2), ராமநாதபுரம் (4), சிவகங்கை (4) தஞ்சாவூா் (8), தேனி (4), தூத்துக்குடி (6), விருதுநகா் (7).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.