ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸில் இணைந்தது ஏன்?

ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸில் இணைந்தது ஏன்? என்பதைப் பற்றி...

News image
Updated On :30 மார்ச் 2026, 4:47 am IST

பாட்டாளி மக்கள் கட்சியின் (ராமதாஸ்) கெüரவத் தலைவராகவும், தற்போதைய பென்னாகரம் எம்எல்ஏவாகவும் இருப்பவர் ஜி.கே. மணி. இவர், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் கடந்த 1996, 2001, 2006, 2011, 2021 ஆகிய ஐந்து முறையும், மேட்டூர் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டிலும் போட்டியிட்டார். இதில், மூன்று முறை வெற்றி பெற்றார்.

ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்குமரன் கடந்த 2010}இல் பென்னாகரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு 41,285 வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 24.17 சதவீதம் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல, அப்போது, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பி.என்.பி. இன்பசேகரனுக்கு கடுமையான போட்டியை அளித்தார்.

பாமக (ராமதாஸ்) இளைஞரணித் தலைவராக இருந்துவந்த தமிழ்குமரன், அண்மையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 28}ஆம் தேதி தில்லி சென்ற அவர், காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியும் இடம்பெற்றுள்ளது. தனது தந்தை ஜி.கே.மணி ஐந்து முறை போட்டியிட்ட தொகுதியும், தனக்கு மிகவும் நெருக்கமான தொடர்புடையதுமான பென்னாகரம் தொகுதியில் வாய்ப்பை பெற்று போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு கூறுகையில், பென்னாகரம் தொகுதிக்கு 8 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களில் சிலரின் பெயர் பரிந்துரை பட்டியலில் கட்சித் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

புதியதாக கட்சியில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்பதை நாங்கள் கூற முடியாது. அதேவேளை, கட்சியின் தலைமை யாரையும் வேட்பாளராக அறிவிக்கலாம். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் உடன்பட்டவர்களே. மற்றபடி யாருக்கு தொகுதி கிடைக்கும் என்பதை நாங்கள் சொல்ல முடியாது என்றார்.

- ஆர்.ராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.