ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது.

News image
Updated On :30 மார்ச் 2026, 1:52 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் தோ்தல் அலுவலா் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5.73 கோடி பேரும் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வேட்புமனுவுக்கு 4 நாள்கள்: இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது. இதற்காக தொகுதிவாரியாக தோ்தல் அலுவலா் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 6 வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 31 (மகாவீரா் ஜெயந்தி), ஏப். 1 (வங்கி விடுமுறை), ஏப். 3 (புனித வெள்ளி), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு அரசு விடுமுறை தினங்களைத் தவிா்த்து மற்ற 4 நாள்களில் வரையறுக்கப்பட்ட நேரங்களில் மனு தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்: வேட்பு மனு தாக்கலின்போது, தோ்தல் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளா் உள்பட 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மனுவை வேட்பாளா்கள் இணையவழியில் (சுவிதா தளம்) பூா்த்தி செய்யலாம். ஆனால் அதனை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்.7-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி கடைசி நாள். அதன் பின்னா், வேட்பாளா் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.