தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! முழு விவரம்...

தமிழ்நாட்டில் மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...

News image

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விறுவிறு - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 5:37 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(ஏப். 23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69%, 11 மணி - 37.56% பிற்பகல் 1 மணி - 56.81%, பிற்பகல் 3 மணி - 70% வாக்குகள் பதிவானது.

தற்போது மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 89.32 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமர் மாவட்டத்தில் 73.44 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாவட்டவாரியாக விவரம்... (சதவிகிதத்தில்)

அரியலூர் - 83.09

செங்கல்பட்டு - 82.41

சென்னை - 81.34

கோயம்புத்தூர் - 82.33

கடலூர் - 81.91

தருமபுரி - 87.28

திண்டுக்கல் - 86.35

ஈரோடு - 87.59

கள்ளக்குறிச்சி - 84.22

காஞ்சிபுரம் - 84.92

கன்னியாகுமரி - 73.44

கரூர் - 89.32

கிருஷ்ணகிரி - 82.40

மதுரை - 77.89

மயிலாடுதுறை - 78.41

நாகப்பட்டினம் - 83.15

நாமக்கல் - 87.63

பெரம்பலூர் - 82.75

புதுக்கோட்டை - 81.55

ராமநாதபுரம் - 74.41

ராணிப்பேட்டை - 86.28

சேலம் - 88.02

சிவகங்கை - 74.44

தென்காசி - 79.28

தஞ்சாவூர் - 78.09

நீலகிரி - 75.90

தேனி - 78.73

தூத்துக்குடி - 77.56

திருச்சிராப்பள்ளி - 82.76

திருநெல்வேலி - 75.10

திருப்பத்தூர் - 85.28

திருப்பூர் - 86.33

திருவள்ளூர் - 80.70

திருவண்ணாமலை - 85.59

திருவாரூர் - 80.65

வேலூர் - 85.06

விழுப்புரம் - 85.45

விருதுநகர் - 82.16

Summary

82.24% Voter Turnout in Tamil Nadu by 5 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.