தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றி கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கான கடைசி நாளான இன்று தவெக தலைவர் விஜய் பாலவாக்கம், திருவான்மியூர், சைதாப்பேட்டை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இதுபற்றி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த வெளியிட்டுள்ள அறிவிப்பில், “21.04.2026, செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக, தலைவர் விஜய் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் மைதானத்தில் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, க்யூ.ஆர். கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Where is TVK leader Vijay campaigning today?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
